< Back
மாநில செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா

தினத்தந்தி
|
19 Aug 2022 7:00 PM IST

பொள்ளாச்சி, ஆனைமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தி

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு, தனியார் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கலந்து கொண்டனர். மேலும் ரமணமுதலிபுதூரில் சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணரின் அவதார வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்மனுக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், கடை வீதி விஷ்ணு பஜனை கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

குழந்தைகள் ஊர்வலம்

பொள்ளாச்சியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி விசுவ இந்து பரிஷத் சார்பில் சத்திரம் வீதியில் ஊர்வலம் புறப்பட்டது. இதில் 250 குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கலந்துகொண்டனர். ஊர்வலம் கரிவரதராஜ பெருமாள் கோவில் வழியாக லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று நிறைவடைந்தது. பின்னர் அங்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதேபோன்று ஆனைமலையிலும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது.

ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மேலும் 9 வகையான பூக்களை கொண்டு சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் பக்தர்களுக்கு கிருஷ்ணர் புகைப்படம், வளையல், மஞ்சள் கரடு, சுண்டல் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்