< Back
மாநில செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா
தென்காசி
மாநில செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா

தினத்தந்தி
|
7 Sept 2023 10:48 AM IST

பாவூர்சத்திரம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பாவூர்சத்திரம்:

ஆவுடையானூரில் உள்ள பொடியனுார் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். மாணவி சுதர்சினி வரவேற்றார். மாணவி வைஷ்ணவி, ஆசிரியர் தினம் குறித்து பேசினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து வந்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியைகளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவி ஆஸ்மி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்