< Back
மாநில செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா

தினத்தந்தி
|
6 Sept 2023 1:45 AM IST

திண்டுக்கல் ரூபகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

திண்டுக்கல் பூங்கோடை கே.ஆர்.நகரில் உள்ள ரூபகிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. மேலும் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிற 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து பங்கேற்றனர். இதனையடுத்து ரூபகிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்