< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா
|23 Aug 2022 1:12 AM IST
சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தங்க கேடயத்திலும், கிருஷ்ணர் வெள்ளி கேடயத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் கலந்துகொண்டு உறியடித்தனர்.
இதனையடுத்து போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள கடிகாசல பஜனை கோவிலில் நடந்த உறியடி நிகழ்ச்சியிலும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் நிா்வாகம் செய்திருந்தது.