கள்ளக்குறிச்சி
கிருஷ்ண ஜெயந்தியையொட்டிவழுக்குமரம் ஏறும் திருவிழா
|கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்குமரம் ஏறும் திருவிழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சாமி உட்பிரகாரத்தில் வீதிஉலா நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, உலகப்பசெட்டி கொள்ளைத்தெருவில் உள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் நவநீத கிருஷ்ணா் சாமி வீதிஉலா நடைபெற்றது. அப்போது, இளைஞர்கள், பெண்கள் கோலாட்டம் மற்றும் கும்மியடித்தும், ஆடிப் பாடிக்கொண்டு சென்றனர். அதேபோல் சாமி ஊர்வலம் நடந்த தெருக்களில் ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலும் உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் உறியடியில் கலந்து கொண்டனர். மேலும், கிராமச்சாவடி தெருவில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினார்கள். தொடர்ந்து கடைவீதி, கவரைத்தெரு, கிராமச்சாவடி தெரு ஆகிய வீதி வழியாக சாமி வீதிஉலா வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.