< Back
மாநில செய்திகள்
பள்ளிபாளையம், மோகனூரில்  கிருஷ்ண ஜெயந்தி விழா
நாமக்கல்
மாநில செய்திகள்

பள்ளிபாளையம், மோகனூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தினத்தந்தி
|
19 Aug 2022 10:00 PM IST

பள்ளிபாளையம், மோகனூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பள்ளிபாளையம், மோகனூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணர் கோவில்

பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையோரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் தேன், இளநீர் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு, தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையம்

மோகனூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருஷ்ணர் சிலை உள்ளது. இங்கு நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மோகனூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாநிதி, சித்தா டாக்டர் கலையரசி, டாக்டர் லாவண்யா, வட்டார சுகாதார ஆய்வாளர் செல்வராஜா, சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பூஜையில் வைக்கப்பட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செவிலியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்