< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோயம்பேடு; மீண்டும் உயர்ந்த தக்காளி விலை...!
|26 July 2023 7:52 AM IST
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
சென்னை,
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஜெட்வேகத்தில் உயர்ந்து ரூ.100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, காய்கறி வரத்து குறைவு ஆகிய இரண்டும் தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக தக்காளி விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி வரத்து குறைவாக உள்ளதால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.