< Back
மாநில செய்திகள்
கடனை திருப்பி கொடுக்காததால் கோயம்பேடு பழ வியாபாரியை காரில் கடத்தி அடி, உதை: அண்ணன்-தம்பி கைது
சென்னை
மாநில செய்திகள்

கடனை திருப்பி கொடுக்காததால் கோயம்பேடு பழ வியாபாரியை காரில் கடத்தி அடி, உதை: அண்ணன்-தம்பி கைது

தினத்தந்தி
|
11 Aug 2022 7:24 AM IST

கடனை திருப்பி கொடுக்காததால் கோயம்பேடு பழ வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்து உதை: அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 39). இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். அதே போல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் முருகன் (34). இவருடைய தம்பி மணிகண்டன் (31). இவர்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். தொழில் சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகனிடம் இருந்து சக்திவேல் ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. நேற்று அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து சக்திவேலிடம் கொடுத்த கடனை திரும்ப தரும்படி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அண்ணன்- தம்பி இருவரும் பழ வியாபாரி சக்திவேலை காரில் கடத்திச் சென்று அரும்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து சரமாரியாக அடித்து உதைத்து கொடுத்த கடனை திருப்பி தரும்படி கேட்டனர். அங்கிருந்து தப்பி வந்த சக்திவேல், கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முருகன் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செ ய்யப்பட்டது.

மேலும் செய்திகள்