< Back
மாநில செய்திகள்
லூலூ மாலுக்கு இடமளிக்கவே கோயம்பேடு பேருந்து நிலையம் இடமாற்றம் - சீமான் காட்டம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

லூலூ மாலுக்கு இடமளிக்கவே கோயம்பேடு பேருந்து நிலையம் இடமாற்றம் - சீமான் காட்டம்

தினத்தந்தி
|
5 Jan 2024 10:16 PM IST

சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கத்தில் எதற்காக பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் வர உள்ள லூலூ மாலுக்கு இடமளிக்கவே கிளாம்பாக்கத்துக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

சென்னை மாநகரில் ஒரு பேருந்து நிலையமாவது இருக்கிறதா? இருந்தது ஒன்று; அதையும் மூடிவிட்டீர்கள். 110 கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய அந்த பேருந்து நிலையத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? லூலூ மாலுக்கு கொடுக்கத்தானே இந்த வேலையை செய்கிறீர்கள்?

சென்னை மாநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கத்தில் எதற்காக பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும்?" என்று கூறினார்.

மேலும் செய்திகள்