< Back
மாநில செய்திகள்
கோவிலூர் மடாலய ஆதீனம் காலமானார்
சிவகங்கை
மாநில செய்திகள்

கோவிலூர் மடாலய ஆதீனம் காலமானார்

தினத்தந்தி
|
18 Jan 2023 12:59 AM IST

காரைக்குடி அருகே கோவிலூர் மடாலய ஆதீனம் சீர்வளர்சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் காலமானார்.

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் மடாலயத்தின் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 82. முதுகலை பட்டதாரியான இவர் ஆன்மிகம், கல்வி, மருத்துவ பணிகளில் சிறந்த சேவையாற்றி வந்தார். கோவிலூரில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அமைத்ததோடு சமூக பணிகளிலும் அக்கறை காட்டியவர். கோவிலூர் மடாலயம் இந்தியாவில் மட்டுமன்றி வெளி நாடுகளிலும் ஏராளமான நற்பணிகள் ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு செய்தி கேட்டு கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.இன்று(புதன்கிழமை) பகல் 12 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்