< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் முன்னாள் ஆணையாளர் மீது வழக்கு
|29 Jun 2023 12:15 AM IST
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் முன்னாள் ஆணையாளர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக மாணிக்கவாசகம் என்பவர் 2020-ம் ஆண்டு மார்ச்.3-ந் தேதி அக்.17-ந் தேதி வரை பணியாற்றினார். அப்போது இலுப்பையூரணி ஊராட்சியைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு சொந்தமான மனைப்பிரிவிற்கு நகர் ஊரமைப்பு ஒப்புதல் பெறாமல் போலி ஆணை தயார் செய்து வரன்முறைப்படுத்தி உத்தரவிட்டதாகவும், இதனால் அரசுக்கு சுமார் ரூ.1.55 லட்சம் நிதி இழப்பு செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார், கோவில்பட்டி முன்னாள் யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகம், நில உரிமையாளர் ஜெயக்குமார், பணம் கையாடலுக்கு உதவியதாக பாண்டர்மங்கலத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.