< Back
மாநில செய்திகள்
கோபி அருகே கூத்தாண்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி அருகே கூத்தாண்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
18 Jun 2022 4:56 AM IST

கோபி அருகே கூத்தாண்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடத்தூர்

கோபி அருகே உள்ள கொளப்பலூர் கூத்தாண்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த புனரமைப்பு பணி நடந்து வந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி பச்சை நாயகி அம்மன் கோவிலில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வருதல், கலசங்கள், முளைப்பாரி கொண்டு வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் விநாயகர் பூஜை நடந்தது.

அதைத்தொடர்ந்து வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் கோபி, கொளப்பலூர் அம்மன் கோவில்பதி, செட்டியாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்