< Back
மாநில செய்திகள்
கொடுமுடி அருகே 9 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற லாட குரு தன்னாசியப்ப சித்தர் கோவில் பொங்கல் விழா
ஈரோடு
மாநில செய்திகள்

கொடுமுடி அருகே 9 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற லாட குரு தன்னாசியப்ப சித்தர் கோவில் பொங்கல் விழா

தினத்தந்தி
|
5 Jun 2022 3:34 AM IST

கொடுமுடி அருகே 9 ஆண்டுகளுக்கு பிறகு லாட குரு தன்னாசியப்ப சித்தர் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது.

ஊஞ்சலூர்-

கொடுமுடி அருகே 9 ஆண்டுகளுக்கு பிறகு லாட குரு தன்னாசியப்ப சித்தர் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது.

9 ஆண்டுகளுக்கு...

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வெங்கம்பூரில் லாட குரு தன்னாசியப்ப சித்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பொங்கல் திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முன்தினம் காலை 4.30 மணிக்கு ஸ்ரீ விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 5.30 மணிக்கு ஸ்ரீ சித்திவிநாயகர் கோவிலில் இருந்து வேல் கண் திறந்து கோவில் வீட்டுக்கு அழைத்துச் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6 மணிக்கு வடக்குப் புதுப்பாளையம் சூளையிலிருந்து குதிரை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ஆலய வீட்டில் இருந்து தன்னாசியப்ப சித்தர் கோவிலுக்கு பொங்கல் வைக்கும் பெண்களை பம்பை உடுக்கை, மேளதாளங்கள் முழங்கிட ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

பொங்கல் விழா

ஊர்வலத்தின் முன்பாக பொங்காளியம்மன் உற்சவ மூர்த்தியை சப்பரத்தில் வைத்து பக்தர்கள் தூக்கி வந்தனர். தொடர்ந்து காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி புனித நீரை கலசங்களில் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் குலகுருநஞ்சை இடையாறு சிவாச்சாரியாரை சித்திவிநாயகர் கோவிலில் இருந்து தன்னாசியப்பர் கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தன்னாசியப்ப சித்தருக்கு பொங்கல் படையலிட்டு பச்சை பூஜையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. நள்ளிரவு 2 மணிக்கு முப்பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நேற்று ஆலய வீட்டில் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 10 மணிக்கு மறு பூஜையுடன் பொங்கல் திருவிழா முடிவுற்றது.

மேலும் செய்திகள்