< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
18 Dec 2022 11:18 PM IST

ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் குவிந்தனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணியத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டு மில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இவ்வாறு தீர்த்தக்கிணறுகளில் நீராடிய பின்னர் பக்தர்கள் கோவிலில் உள்ள சாமியை தரிசனம் செய்ய முதல் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் வரையிலும் இலவச மற்றும் சிறப்பு தரிசன பாதையில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வரிசையாக அனுப்பும் பணியில் போலீஸ் துணை சூப்பிரண்டு தனஜியன் உத்தரவின்பேரில் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேசுவரி மேற்பார்வையில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை மற்றும் சாலை வளைவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது.

மேலும் செய்திகள்