< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
ருத்ரயாகம்-108 சங்காபிஷேகம்
|11 Dec 2022 11:28 PM IST
ருத்ரயாகம்-108 சங்காபிஷேகம் நடக்கிறது.
வெள்ளையபுரம்,
திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் அருகே உள்ள புல்லூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான ஆண்டார் சுவாமி கோவில் உள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 12.30 மணி வரை ஏகாதச ருத்ர யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து சாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அபிஷேகத்திற்காக பசும்பால் வழங்கலாம் என்று கோவில் நிர்வாகி மற்றும் அர்ச்சகர் சுப்பையாகுருக்கள் தெரிவித்துள்ளனர்.