< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
காலபைரவ யாகம்
|30 Nov 2022 10:59 PM IST
காலபைரவ யாகம் நடந்தது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் 12-ம் ஆண்டு சம்பக சஷ்டி காலபைரவர் யாக விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. நேற்று அஷ்ட பைரவர் யாகம், மகா பூர்ணாகுதி, கும்ப அலங்கார புறப்பாடு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், மங்கள இசை வாத்தியங்களுடன் கோவிலை வலம்வந்து புனித கும்ப நீர் அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.