< Back
மாநில செய்திகள்
பாகம்பிரியாள் கோவிலில் அன்னாபிஷேகம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பாகம்பிரியாள் கோவிலில் அன்னாபிஷேகம்

தினத்தந்தி
|
8 Nov 2022 7:42 PM IST

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.

தொண்டி,

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம் பிரியாள் சமேத வல்மீகநாத சாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய காய்கறி, அரிசியை சமையல் செய்து சாமிக்கு படையல் செய்து அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொண்டி சிதம்பரேசுவரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஓரியூர் மட்டுவார் குழலி அம்மன் சமேத சேயுமானார் கோவிலில் அன்னா பிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் சாமிக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி சாமி, அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் உபயமாக வழங்கிய காய்கறிகள், அரிசியை கொண்டு சமையல் செய்து உச்சிக்கால வேளையில் சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்படவும் பருவமழை சரியான முறையில் பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

தொடந்து தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் குருக்கள் ரவி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்