ராமநாதபுரம்
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா வட்டானம் ஓடவயல் கிராமத்தில் கற்பக விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஆலயத்தின் முன்பு அமைக் கப்பட்டு இருந்த யாக சாலையில் பிச்சுமணி குருக்கள், திருவெற்றியூர் மணிகண்ட சிவம் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாக வேள்விகளை நடத்தினர். யாக சாலை பூஜைகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர். தொடர்ந்து கற்பக விநாயகர் முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருவறையில் சாமி, அம்மனுக்கு மகா அபிஷேகமும் தீபாராத னையும் நடைபெற்றது. தொடர்ந்து கற்பக விநாயகர், முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் ஓடவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடு களை ஓடவயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.