ராமநாதபுரம்
ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் பிரதோஷ விழா
|ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் பிரதோஷம் விழா நடந்தது.
தொண்டி,
திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் சனி பிரதோஷம் நடைபெற்றது. இதனையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற திரவியங் களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நந்தீஸ்வரர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொண்டி, ஓரியூர், தீர்த்தாண்டதானம், எஸ்.பி. பட்டினம், திருவெற்றியூர், பாண்டுகுடி, நம்புதாளை போன்ற ஊர்களிலும் சிவாலயங்களில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. திருவாடானை தாலுகா ஓரியூரில் மட்டுவார் குழலி அம்மன் சமேத சேயுமானார் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சாமி அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.