< Back
மாநில செய்திகள்
முதலிராயசுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
திருப்பூர்
மாநில செய்திகள்

முதலிராயசுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

தினத்தந்தி
|
29 Oct 2022 12:37 AM IST

காங்கயம் அருகே முதலிபாளையத்தில் உள்ள முதலிராயசுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.


காங்கயம் அருகே முதலிபாளையத்தில் உள்ள முதலிராயசுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

முதலிராயசுவாமி கோவில்

காங்கயம் அருகே ஊதியூர் -முதலிபாளையம் கிராமத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தின் செம்பூத்த மற்றும் ஆந்தை ஆகிய குலத்தவர்களின் குலதெய்வங்களான விநாயகர், கன்னிமார்சுவாமி, முதலிராயசுவாமி, ெபான் திருமலாயி ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருப்பணி கமிட்டியினர், உபயதாரர்கள் மற்றும் ஊர்ெபாதுமக்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் திருப்பணிகளை செய்து மகா கும்பாபிஷேக விழாவை நடத்தி முடித்தனர். அதை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூைஜ நடந்தது. விழாவில் விநாயகர் வழிபாடு, கலச பூஜை, தீபாராதனை, மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு யாக பூஜைகளும் நடந்து முடிந்தன.

விழாவில் கோவை, ஈரோடு, திருப்பூர்ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்களும், கோவிலின் குலத்தவர்களும் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதத்துடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து பெண்கள் வழிபட்டனர். தொடர்ந்து உடுக்கை பாட்டு, படுகளம் விடுதல், அருள்வாக்கு கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. முன்னதாக மகாகும்பாபிஷேக விழாவிலும், அதை தொடர்ந்து நடந்த மண்டல பூஜை விழாவிலும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் எஸ்.கே.கே.பாலசுப்பிரமணியம், பெருமாள்பாளையம் ஊராட்சி தலைவர் எம்.பி.சண்முக சுந்தரம் மற்றும் ஆன்மிகவாதிகளும் கலந்து ெகாண்டு சுவாமிகளை வழிபட்டனர்.

பாராட்டு

முடிவில் விழா சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்த உபயதாரர்கள், குலத்தவர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், திருப்பணி குழுவினர் ஆகியோரை பாராட்டி பொன்னாடை அணிவித்து நன்றி கூறப்பட்டது. பின்னர் மறுபூஜை நடந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்