< Back
மாநில செய்திகள்
உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருப்பூர்
மாநில செய்திகள்

உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன.

தினத்தந்தி
|
9 Oct 2022 3:30 AM IST

உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன.

உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன.

உடுமலை திருப்பதி கோவில்

உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் அருகே உள்ள செங்குளத்தின் கரையையொட்டி இயற்கை எழில் சூழ்ந்துள்ள இடத்தில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி ஶ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில்.இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான நேற்று (8.10.2022) இந்த கோவிலில்

ஶ்ரீ வேங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.இதில்பக்தர்கள் திரளாக கலந்து கொண்டுநீண்ட வரிசையில் நின்று சென்று வழிபட்டனர்.

ஶ்ரீ வில்லிபுத்தூர் 24-வதுபட்டம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசிவழங்கினார்.சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஶ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

பெருமாள் கோவில்கள்

இதேபோன்று உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சவுரிராஜபொருமாள் கோவில், தென்னைமரத்து வீதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரியகடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ணசாமி கோவில், ஏரிப்பாளையத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்