< Back
மாநில செய்திகள்
கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
11 Sept 2022 10:56 PM IST

பாண்டுகுடி கோனேரியேந்தல் மகாலிங்க மூர்த்தி, ஆகாச அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

தொண்டி,

பாண்டுகுடி கோனேரியேந்தல் மகாலிங்க மூர்த்தி, ஆகாச அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம்

திருவாடானை தாலுகா பாண்டுகுடி, கோனேரியேந்தல் முருகனேந்தல் கிராமத்தில் மகாலிங்க மூர்த்தி, ஆகாச அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் பாண்டுகுடி கணேச குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களால் யாக வேள்விகள் நடைபெற்றது.

இன்று (திங்கட்கிழமை) மகாபூர்ணகுதி தீபாராதனைகள் நிறைவு பெற்று காலை6.30 மணி முதல் 7.25 மணிக்குள் பூரண புஷ்கலை சமேத ஆகாச அய்யனார் மற்றும் வழுதநாயகி அம்மன், கருப்பர் சாமிக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 9மணி முதல் 9.30 மணிக்குள் பெரியநாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் மகாலிங்க மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து விசேஷ தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. வாணவேடிக்கை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இன்று பகல் கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது.

ஏற்பாடு

விழா ஏற்பாடுகளை பாண்டுகுடி உட்கடை கோனேரியேந்தல் முருகனேந்தல் கிராம பொதுமக்கள், கே.ஓ.பி. அண்ட் கோ நிறுவனர் கே.ஓ.பெரிய கருப்பன் என்ற பாலு, பாண்டுகுடி ஊராட்சி தலைவர் வக்கீல் சிங்கதுரை, எஸ்.எஸ். அண்ட் கோ அரசு முதல் நிலைஒப்பந்த தாரர் கே.ஓ.பி. சுப்பிரமணியன் மற்றும் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்