< Back
மாநில செய்திகள்
இரவு 10 மணிக்குமேல் கோவில் வரை செல்ல மறுக்கும் அரசு பஸ்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

இரவு 10 மணிக்குமேல் கோவில் வரை செல்ல மறுக்கும் அரசு பஸ்கள்

தினத்தந்தி
|
4 Sept 2022 11:37 PM IST

வெளியூர்களில் இருந்து இரவு 10 மணிக்குமேல் ராமேசுவரம் வரும் அரசு பஸ்கள் கோவில் வரை இயக்கப்படாமல் பயணிகளை பஸ் நிலையத்திலேயே இறக்கிவிடும் நிலை தொடர்கிறது.

ராமேசுவரம்,

வெளியூர்களில் இருந்து இரவு 10 மணிக்குமேல் ராமேசுவரம் வரும் அரசு பஸ்கள் கோவில் வரை இயக்கப்படாமல் பயணிகளை பஸ் நிலையத்திலேயே இறக்கிவிடும் நிலை தொடர்கிறது.

புண்ணிய தலம்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகின்றனர்.

அது போல் முக்கிய புண்ணிய தலமாக விளங்கும் ராமேசுவரம் பகுதிக்கு மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்ப கோணம், நாகப்பட்டினம், நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், பழனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் இருந்தும் அரசு பஸ்கள் 24 மணி நேரமும் ராமேசுவரத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன.

உத்தரவு

இவ்வாறு வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் வரும் அரசு பஸ்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் பஸ்நிலையத்திலேயே பயணிகள் இறக்கி விடப்படுவார்கள்.

அங்கிருந்து அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலுக்கு செல்ல அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இரவு 10 மணிக்கு மேல் வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் வரும் அனைத்து அரசு பஸ்களும் கண்டிப்பாக கோவில் வாசல் வரையிலும் செல்ல வேண்டும் என்று அரசு போக்குவரத்து கிளை மேலாளர் உத்தரவிட்டு உள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக வெளியூர்களில் இருந்து இரவு 10 மணிக்குமேல் ராமேசுவரம் வரும் அரசு பஸ்கள் கோவில் வாசல் வரையிலும் இயக்கப்படுவது இல்லை என்று பயணிகள் புகார் கூறுகின்றனர்.

கோரிக்கை

எனவே வெளியூர்களில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் ராமேசுவரம் வரும் அனைத்து அரசு பஸ்களும் ராமேசுவரம் கோவில் வாசல் வரையிலும் வந்து பயணிகளை இறக்கிவிட்டு செல்லவும் கோவில் வரை உள்ளே வராத பஸ் நடத்துனர் மற்றும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்