< Back
மாநில செய்திகள்
அச்சுந்தன்வயல் கண்ணன் கோவிலில்  வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அச்சுந்தன்வயல் கண்ணன் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
19 Aug 2022 10:11 PM IST

அச்சுந்தன்வயல் கண்ணன் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி நடந்தது. இதையொட்டி நேற்று காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கண்ணன், பாமா-ருக்மணிக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. கோவில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த வழுக்குமரத்தில் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த வழுக்கு மரம் முழுவதும் எண்ணெய் ஊற்றப்பட்டு இருந்ததால் ஏராளமான இளைஞர்கள் வழுக்கியடி தடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் சில இளைஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு லாவகமாக ஏறி அதன் உயரத்தில் கட்டப்பட்டிருந்த பரிசு பையை தட்டி சென்றனர். இந்த நிகழ்ச்சியை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா பரிசு வழங்கி பாராட்டினார். இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அச்சுந்தன்வயல் ஊராட்சி தலைவர் சசிகலா லிங்கம், கிராம தலைவர் செட்டியப்பன், கமிட்டி நிர்வாகி லிங்கம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று கண்ண பிரானுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்று உறியடி உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்