திருப்பூர்
இந்து முன்னணி சார்பில் முத்தையன் கோவிலில் பக்தர்கள் மரியாதை
|இந்து முன்னணி சார்பில் முத்தையன் கோவிலில் பக்தர்கள் மரியாதை செலுத்தினர்
இந்து முன்னணி சார்பில் முத்தையன் கோவிலில் பக்தர்கள் மரியாதை செலுத்தினர்
குண்டடத்தை அடுத்துள்ள வெருவேடம்பாளையத்தில் ஆங்கிலேயனுக்கு வரி கொடுக்க மறுத்த காரணத்தால், ஆங்கிலேய சிப்பாய்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட முத்தையனுக்கு அவ்வூர் பொதுமக்கள் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நாட்டின் 75-வது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு நேற்று இந்து முன்னணி சார்பில் முத்தையன் கோவிலில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரணியம் தலைமை தாங்கினார். இதில் முத்தையன் தம்பதியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு தேசிய கொடி ஏற்றப்பட்டது. பின்னர் முத்தையன் வீரவரலாற்றை இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் விவரித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமார், மாவட்ட தலைவர் மங்கலம் ரவி, துணைத்தலைவர் பெரியசாமி, மாநில இளைஞரணி செயலாளர் யோகேஸ்வரன் மற்றும் தாராபுரம், குண்டடம், கொடுவாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.