< Back
மாநில செய்திகள்
ராமேசுவரத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
3 Aug 2022 9:15 PM IST

ஆடி 18-ம் பெருக்கையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் குவிந்தனர்.

ராமேசுவரம்,

ஆடி 18-ம் பெருக்கையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் குவிந்தனர்.

ஆடிப்பெருக்கு

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் ஆடி 18-ம் பெருக்கையொட்டி தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்காக நேற்று காலை முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடிய பெண்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் திருமாங்கல்ய கயிற்றை மாற்றி வழிபட்டனர்.

சாமி தரிசனம்

ஆடிப்பெருக்கையொட்டி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்ய நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிழக்குவாசல் பகுதியில் இருந்து கோவிலின் வடக்கு ரத வீதி சாலை வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்