< Back
மாநில செய்திகள்
கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் 2-வது முறையாக  நிரம்பியது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் 2-வது முறையாக நிரம்பியது

தினத்தந்தி
|
29 Aug 2022 12:07 AM IST

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் 2-வது முறையாக வழிந்து ஓடுகிறது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொட்டரை கிராமத்தில் உள்ள மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. தற்போது கடல்போல் காட்சியளிக்கும் நீர்த்தேக்கத்தில் இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். கொட்டை மருதையாறு நீர்த்தேக்கம் இந்த ஆண்டில் பெய்த மழையால் 2-வது முறையாக நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்