< Back
மாநில செய்திகள்
கூவம் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கூவம் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
1 Aug 2022 1:55 PM GMT

கூவம் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள புதிய கூவம் கிராமத்தில் முத்துமாரியம்மன் என்ற ஊர்க்காத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 29-ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் போன்ற சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது கூவம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்து தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதனை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். அதைத்தொடர்ந்து ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சம் பழம் போன்ற பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் மேளதாளத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.

மேலும் செய்திகள்