< Back
மாநில செய்திகள்
கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம்
கரூர்
மாநில செய்திகள்

கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம்

தினத்தந்தி
|
12 Jun 2022 11:48 PM IST

கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

கரூர்,

கரூரில் கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் மற்றும் இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் பசுவை தென்னரசு தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் ரவிகுமார் முன்னிலை வகித்தார். நிறுவனரும், பொருளாளருமான சரவணன், மாநில பொதுச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பசுபதி பாளையம் ரவுண்டானாவில் மன்னர் வல்வில் ஓரி சிலை அமைத்திட ஆவண செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வல்வில் ஓரி மாளிகை என பெயர் சூட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்