கரூர்
கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை
|கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்ேதர்வில் சாதனை படைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். பள்ளி மாணவி லோபாஷினி 592 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி மோகனஸ்ரீ 591 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், மாணவி தணிகா 590 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும், மாணவி பிரித்திகா 588 மதிப்பெண்கள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றுள்ளார்.
மேலும் 590 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேரும், 580-க்கு மேல் 6 பேரும், 570-க்கு மேல் 12 பேரும், 550-க்கு மேல் 20 ேபரும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவர் ஆடிட்டர் கிருத்திகன் லோகேஷ், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் தியாகராஜன், உபதலைவர் சுப்பிரமணியன், இணைச் செயலாளர் வக்கீல் நடராஜன், பேருந்து இயக்குனர் வக்கீல் செந்தில்குமார், இயக்குனர்கள், பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.