< Back
மாநில செய்திகள்
காங். தலைவர் கார்கேவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
மாநில செய்திகள்

காங். தலைவர் கார்கேவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தினத்தந்தி
|
21 July 2024 12:59 PM IST

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களின் அனுபவமும், திறமையான தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.

சமூகநீதிக்கான உங்களின் அர்ப்பணிப்பும், ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்கான முயற்சிகளும் நம் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் முன்னோக்கிய பயணம் தொடர்ந்து வெற்றியடையட்டும்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்