< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
கோவில்களில் கொலு வழிபாடு
|17 Oct 2023 11:37 PM IST
கோவில்களில் கொலு வழிபாடு நடைபெற்றது.
கீரமங்கலத்தில் உள்ள மெய்நின்றநாத சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏராளமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கொலுவை வழிபட்டு செல்கின்றனர். திருவரங்குளத்தில் அரங்குளநாதர் கோவிலில் நவராத்திரியையொட்டி அர்த்தமண்டபத்தில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் அங்கு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானவர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.