< Back
மாநில செய்திகள்
கொல்லிமலையில்குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலையில்குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
17 Oct 2023 12:30 AM IST

கொல்லிமலையில் குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. இதன் காரணமாக நேற்று மலைப்பகுதியில் திடீரென பனிமூட்டம் காணப்பட்டது. அதேபோல் 30-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 70-வது கொண்டை ஊசி வளைவு வரையிலும், சோளக்காடு, செம்மேடு செல்லும் பிரதான சாலையிலும் பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால் பஸ், கார் மற்றும் லாரிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சிரமத்துடன் சென்றது. மேலும் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியை கடந்தவர்களும் சிரமப்பட்டனர். எனினும் நேற்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு நிலவும் குளுகுளு சீசனால் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்