நாமக்கல்
கொல்லிமலையில்இறந்து கிடந்த முதியவரின் அடையாளம் தெரிந்தது
|சேந்தமங்கலம்:
கொல்லிமலை செம்மேட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 3-ந் தேதி பிணமாக கிடந்தார். வாழவந்தி நாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா தொட்டில்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 60) என்பது தெரியவந்தது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான இவர் கடந்த 2-ந் தேதி கொல்லிமலைக்கு வந்ததும், அங்கு உடல்நலக்குறைவால் இறந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே ஆறுமுகத்தை காணவில்லை என்று அவருடைய மனைவி சுந்தரம்மாள் மேட்டூர் கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து வாழவந்தி நாடு போலீசார் நேற்று சுந்தரம்மாளிடம் கணவர் ஆறுமுகத்தின் உடலை ஒப்படைத்தனர்.