< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி காரணமாககொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடைசுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாககொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடைசுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தினத்தந்தி
|
23 July 2023 12:30 AM IST

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து மகிழ்ச்சி அடைவர்.

இந்த நிலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது.

மேலும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதித்தது தொடர்பாக அடிவாரத்தில் உள்ள காரவள்ளி சோதனைச்சாவடி முன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்