< Back
மாநில செய்திகள்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை கோலாகலம்
மாநில செய்திகள்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை கோலாகலம்

தினத்தந்தி
|
10 April 2024 11:10 PM IST

பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் செய்யபட்டு இருந்தன.

கொல்லங்கோடு.

தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மீனபரணி நாளில் ஏராளம் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று அதிகாலை 6.30 மணிக்கு துவங்கியது. முன்னதாக அம்மன்கள் இருவரும் கோவிலின் முன் அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் எழுந்தருளினர் தொடர்ந்து தூக்ககாரர்கள் குளித்து முடித்து வந்து கோவிலை சுற்றி முட்டு குத்தி நமஸ்காரத்தில் ஈடுபட்டனர இதனை தொடர்ந்து முதலாவதாக அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்க தேரில் அம்மன் தூக்கம் நடத்தப்பட்டது இதனையடுத்து வரிசையாக ஒவ்வொரு தூக்கமும் நடத்தி வைக்கப்பட்டது.ஒன்று முதல் 50 வரை உள்ள தூக்ககாரர்கள் கோவிலில் வரிசையாக காத்திருக்க மீதமுள்ள தூக்ககாரர்கள் கச்சேரிநடை பகுதியில் உள்ள தறவாடு வீட்டிற்கு சென்று உடல் மற்றும் முகத்தில் கரும்புள்ளிகள் குத்தி வாழும் பரிவட்டமும் வாங்கி ஊர்வலமாக திருவிழா கோவில் வந்தடைந்தனர்.

திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு குழந்தைபேறு கிடைக்கப் பெற்றால் அவ்வாறு கிடைக்கப்பெற்ற குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டி இந்த கோவிலில் தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர் இதற்க்காக வடிவமைக்கப்பட்ட 48 அடி உயர தேரில் நான்கு குழந்தைகள் ஒரு முறை கோவிலை சுற்றி வலம் வர தூக்க நேர்ச்சையானது முடித்து வைக்கப்படுகிறது இந்த நிகழ்வு இன்று நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெறுகிறது . இந்த நிகழ்வில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு தூக்க நேர்ச்சையானது நடத்தப்பட்டது.தொடர்ந்து தூக்க நேர்ச்சை முடிக்கப்பட்டு வில்லின் மூட்டில் குருதி கொடுக்கும்போது.மேலும் தூக்கத்திருவிழாவை காண குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் அதிக கூட்டம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி செய்யப்பட்டு இருந்ததோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நேரில் வந்து அம்மன் தரிசனம் செய்து பாதுகாப்பு பணியை கண்காணித்தார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் செய்யபட்டு இருந்தன.

விழா ஏற்பாடுகளை தலைவர் இராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணைத் தலைவர் சசிகுமாரன் நாயர், இணைச்செயலாளர் பிஜூகுமார் ,உறுப்பினர்கள் சஜிகுமார் ,புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீ குமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் உட்பட கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்