< Back
மாநில செய்திகள்
கொளத்தூர் அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்
சேலம்
மாநில செய்திகள்

கொளத்தூர் அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்

தினத்தந்தி
|
29 Jun 2023 3:25 AM IST

கொளத்தூர் அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேட்டூர்:

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காவேரிபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் தேவராஜன். இவர், சரிவர பள்ளிக்கு வருவது இல்லையாம். அப்படியே பள்ளிக்கு வந்தாலும் காலதாமதமாக பள்ளிக்கு வருவாராம். இதனால் மாணவ- மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. அதன்பேரில் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஆசிரியர் தேவராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்