சென்னை
கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நாளை செயல்படாது - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
|கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நாளை செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை(வெள்ளிக்கிழமை ) காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மண்டலம் 6-க்கு உட்பட்ட வில்லிவாக்கம் ஜே.பி.ஐ.சி. கழிவுநீர் நீரிறைக்கும் நிலையம் செயல்படாது.
எனவே, மண்டலம் 3, 6, 7 மற்றும் 8-க்கு உட்பட்ட இடங்களில் உள்ள எந்திர நுழைவு வாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசர தேவைகளுக்கு கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதி அலுவலர்களையும், தலைமை அலுவலக புகார் பிரிவை தொடர்பு கொள்ளலாம். புகார் பிரிவு எண்கள்:- மண்டலம் 3 - 81449 30903, 81449 30253, மண்டலம் 6- 81449 30906, 81449 30256, மண்டலம் 7- 81449 30907, 81449 30257, மண்டலம் 8- 81449 30258 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.