< Back
மாநில செய்திகள்
கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில்  பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
ஈரோடு
மாநில செய்திகள்

கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

தினத்தந்தி
|
1 Sep 2022 10:02 PM GMT

கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடுமுடி

கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒத்திகை நிகழ்ச்சி

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி பேரிடர் மேலாண்மை கண்காணிப்பாளரும், கொடுமுடி வேளாண்துறை உதவி இயக்குனருமான யசோதா மேற்பார்வையில், கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, பேரூராட்சி தலைவர் திலகவதி மணி, துணைத்தலைவர் ராஜா கமால் ஹசன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

பைபர் படகு மூலம்...

இதில் தீயணைப்பு துறையினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு எவ்வாறு வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது என்றும், அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்தும் விளக்கமாக ஒத்திகை மூலம் செய்து காண்பித்தனர்.

குறிப்பாக காவிரி ஆற்றில் வெள்ள நீரில் அடித்துச் செல்பவரை தீயணைப்பு வீரர்கள் பைபர் படகு மூலம் சென்று தக்க மீட்பு உபகரணங்கள் மூலமாக காப்பாற்றி அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தன்னார்வலர்களும், கொடுமுடி சங்கர வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் கலந்துகொண்டு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியை மண்டல துணை தாசில்தார் பரமசிவம், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வனத்துறையினர், மின்வாரிய ஊழியர்கள், கூட்டுறவுத்துறையினர் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பார்த்தனர்.

மேலும் செய்திகள்