ஈரோடு
கொடுமுடி ஆட்சி அம்மன் கோவிலில்நவராத்திரி கொலு வழிபாடு
|கொடுமுடி ஆட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு வழிபாடு நடைபெற்றது
கொடுமுடி ஏமகண்டனூரில் பிரசித்தி பெற்ற ஆட்சி அம்மன் கோவில் உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி இந்த கோவிலில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் ஆட்சி அம்மனுக்கு புவனேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று ஆட்சி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. வருகிற 24-ந் தேதி விஜயதசமி அன்று மங்கல சண்டி யாகத்துடன் கொலு வழிபாடு நிறைவுபெறுகிறது. வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகளை கோவிலின் மடாதிபதி ராணி பூரணாம்பாள் செய்து வருகிறார்.