< Back
மாநில செய்திகள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
மாநில செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
26 March 2024 2:46 PM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை,

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சயான், மனோஜிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து சந்தோஷ் சாமி இன்று காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் கொடநாடு எஸ்டேட்டில் சம்பவத்தன்று என்ன நடந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. யாரெல்லாம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது? யார் சொல்லி அங்கு சென்றனர்? என பல கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.

மேலும் செய்திகள்