< Back
மாநில செய்திகள்
கொடநாடு கொலை வழக்கு: குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவர் - அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
மாநில செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு: குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவர் - அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

தினத்தந்தி
|
1 Aug 2022 9:18 PM IST

கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

சிவகங்கை,

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கொடநாடு கொலை, கொள்ளை குறித்த வழக்கு முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் பகுதியில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்