< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கொடைக்கானல் மலைப்பாதை சீரமைப்பு
|29 Aug 2022 9:19 PM IST
மண்சாிவால் சேதம் அடைந்த கொடைக்கானல் மலைப்பாதை சீரமைக்கப்பட்டது.
கொடைக்கானல் பகுதியில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக, பெரியகுளம் செல்லும் அடுக்கம் மலைப்பாதையில் குருடிக்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து மலைப்பாதையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். குறிப்பாக மலைப்பாதையில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணி நடந்தது.
இந்நிலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மலைப்பாதை சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே அடுக்கம் மலைப்பாதையில் சாலை பணிகள் நடைபெற்று வந்ததால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயணிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இதனை தொடர்ந்து பணிகள் தற்போது நிறைவு பெற்றதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயணிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
--