< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொடைக்கானல்: குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் - தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு
|2 May 2024 7:58 PM IST
புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
திண்டுக்கல்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கொடைக்கானலில் அமைந்துள்ள புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் புனித சலேத் அன்னை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். அவரிடம் குறிஞ்சி ஆண்டவர் கோவில் மற்றும் தேவாலயத்தின் சிறப்புகளை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.