< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சூடுபிடிக்கும் விசாரணை - கூடலூரில் சிபிசிஐடி அதிரடி
|29 Dec 2022 1:53 PM IST
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகை,
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து வந்த நிலையில், இது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று இதில் தொடர்புடைய 8 பேர் கேரளாவுக்கு செல்லும்போது, சந்தேகத்தின் பேரில் நீலகிரி போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் மறுநாள் விடுவித்தனர்.
தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அன்று பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் மேலும் இரண்டு பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.