< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பில் சிக்கிய கோசந்திர ஓடை
தேனி
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பில் சிக்கிய கோசந்திர ஓடை

தினத்தந்தி
|
27 July 2023 8:00 PM GMT

கம்பம் அருகே கோசந்திர ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கம்பம் அருகே உள்ள கோசந்திர ஓடை ஊத்துக்காடு மேற்கு பகுதியில் மலையடிவாரத்தில் தொடங்கி, வள்ளியன்குளம், ஊத்துக்காடு வழியாக அண்ணாபுரத்தில் உள்ள சின்ன வாய்க்காலை சென்றடைகிறது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும்போது சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, விவசாயிகள், பல்வேறு சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஓடைகள் தற்போது தனிநபர் ஆக்கிரமிப்பால் இருந்த சுவடே இல்லாமல் போனது.

குறிப்பாக ஊத்துக்காட்டில் இருந்து சின்னவாய்க்கால் வரை உள்ள ஓடையை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதன்காரணமாக ஓடையில் வரும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாததால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. எனவே கோசந்திர ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்