< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் பாரில் முன்னாள் ஊழியருக்கு கத்திக்குத்து
திருச்சி
மாநில செய்திகள்

டாஸ்மாக் பாரில் முன்னாள் ஊழியருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
3 March 2023 1:54 AM IST

டாஸ்மாக் பாரில் முன்னாள் ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது.

மணிகண்டம்:

தகராறு

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையுடன் இணைந்த பாரை திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனி ஆல்பா நகரை சேர்ந்த நேருவின் மகன் அரவிந்த்(வயது 31) நடத்தி வருகிறார். இந்த பாரில் நாகமங்கலத்தை சேர்ந்த நாகராஜ்(40) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜை வேலையில் இருந்து அரவிந்த் நிறுத்தியுள்ளார். இதனால் வெறுப்பில் இருந்த நாகராஜ், இதுகுறித்து கேட்பதற்காக நேற்று முன்தினம் இரவு நாகமங்கலம் டாஸ்மாக் பாருக்கு வந்துள்ளார். அங்கு பாரில் இருந்த அரவிந்திடம், ஏன் என்னை வேலையை விட்டு நீக்கினாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

கத்திக்குத்து

அப்போது அரவிந்த், அவரது தம்பி ஆனந்த்(28) மற்றும் பாரில் வேலை பார்க்கும் உறையூர் வைக்கோல்கார தெருவை சேர்ந்த குமாரின் மகன் நிதிஷ்குமார்(24), அதே பகுதியை சேர்ந்த அருண்(25) ஆகிய 4 பேரும் சேர்ந்து நாகராஜை தாக்கியதுடன், தாங்கள் வைத்திருந்த கத்தியால் நாகராஜின் தலை மற்றும் முதுகில் குத்தியுள்ளனர். இதில் நாகராஜ் படுகாயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின்திரவியராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நாகராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த், நிதிஷ்குமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்த், அருண் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்