< Back
மாநில செய்திகள்
மாமியார் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மாமியார் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
16 Jun 2022 11:20 PM IST

பேரிகை அருகே குடும்ப தகராறில் மாமியார் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து; மருமகனும், அவருடைய தம்பியையும் போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே சிந்தலன்தொட்டி கிராமத்தை சேர்ந்த சின்னதாயம்மா (வயது 44) என்பவருக்கும், அவருடைய மருமகன் ராமனுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ராமன், தன்னுடைய மாமியார் சின்னத்தாயம்மா, அவருடைய உறவினர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரும் ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமன், அவருடைய தம்பி நாராயணசாமி ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். இதற்கிடையே நாராயணசாமி கொடுத்த புகாரில், சின்னதாயம்மா, வெங்கடேஷ் இருவரும் தன்னையும், ராமனையும் தாக்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்