தஞ்சாவூர்
மண்டி கிடக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும்
|மண்டி கிடக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும்
கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் மண்டிகிடக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி ஆறு
கும்பகோணம் பகுதியில் காவிரி ஆறு பாய்கிறது. கோவில் நகரமான கும்பகோணத்தின் வழியே செல்லும் காவிரி ஆற்றின் படித்துறைகளில் பல்வேறு திருவிழாக்கள், தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. கும்பகோணம் பாலக்கரை சகாஜி தெரு பகுதியில் இருந்து கும்பகோணம் நகருக்குள் நுழையும் முக்கிய சாலையின் அருகே காவிரி ஆறு செல்கிறது.
இந்த காவிரி ஆற்றின் வடபக்கம் தென்னக கேம்பிரிட்ஜ் என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற அரசினர் தன்னாட்சி ஆண்கள் கல்லூரி அமைந்துள்ளது. இதேபோல் ஆற்றின் தென்கரையில் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள், ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன.
முட்புதர்களை அகற்ற வேண்டும்
இந்த பகுதியில் செல்லும் காவிரி ஆற்றின் இருகரைகளிலும் ஏராளமான முட்புதர்கள், செடி-கொடிகள் மண்டி காடுபோல் சூழ்ந்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள், அரசு அலுவலகங்களில் புகுந்து விடுகிறது. இதனால் குடியிருப்புகளில் உள்ளவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
எனவே கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் மண்டி கிடக்கும் முட்புதர்களை முற்றிலுமாக அகற்றி ஆற்றின் கரைகளை பலப்படுத்தி சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.