< Back
மாநில செய்திகள்
முழங்கால் அளவுக்கு மூழ்கிய தரைப்பாலம்: ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடக்கும் மக்கள்
மாநில செய்திகள்

முழங்கால் அளவுக்கு மூழ்கிய தரைப்பாலம்: ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடக்கும் மக்கள்

தினத்தந்தி
|
16 Oct 2022 10:08 AM IST

மாக்கம்பாளையம் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் மாக்கம்பாளையம் பகுதியில், கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாக்கம்பாளையத்தில் இருந்து கோம்பையூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம், வெள்ளத்தில் மூழ்கியதால், மலை கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆபத்தை உணராமல் மக்கள் வெள்ள நீரை கடந்து சென்றனர். இதேபோல், இந்த வழியே இயக்கப்படும் அரசு பேருந்து சர்க்கரைப்பள்ளம் வரை மட்டுமே செல்வதால், மாக்கம்பாளையத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, வெள்ளத்தை கடந்து பேருந்தில் பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்